திருச்சி சந்து கடை மாப்பிள்ளை விநாயகர் குல தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலின் 48 ஆம் ஆண்டு வைகாசி பூச்சொரிதல் மற்றும் அம்மன் திரு வீதி விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

முன்னதாக 15-ம் தேதி துவங்கிய விழாவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கி காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெற்றது. 16ஆம் தேதி நேற்று ‌ மகாதீபாரதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இன்று 17ஆம் தேதி காலை அய்யாளம்மன் படித்துறையில் இருந்து கரகம் பால்குடம் தீர்த்த குடம் மற்றும் அக்கினி சட்டி எடுத்து பக்தர்கள் சிந்தாமணி அண்ணா சிலை ரவுண்டானா வழியாக சத்திரம் பேருந்து நிலையம் ஆண்டாள் தெரு பாபு ரோடு வழியாக திரு வீதி உலா வந்து ஸ்ரீ சக்தி மாரியம்மன் மகா அபிஷேகம் நடைபெற்றது.

இந்த விழாவை தொடர்ந்து கோவில் சார்பாக பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மாபெரும் அன்னதான நிகழ்வு நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாளை 18 ஆம் தேதி ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *