திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்களிடம் செல்போன் திருட முயன்ற வழக்கில் கைதான அரியலூர் மாவட்டம், ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் காவல் நிலையத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த திருச்சி மண்டல டிஐஜி சரவணசுந்தர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காவல் நிலையத்தில் பணியில் இருந்த காவலர்களின் அலட்சியத்தால் கைதி முருகானந்தம் கழிவறையில் தான் அணிந்திருந்த அரங்ஞான் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கைதி முருகானந்தம் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின்போது காவல் நிலையத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலர் ராம்கியை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அவரது உடல் திருச்சி அரசு மருத்துவ மனைக்கு உடர் கூறைவுக்காக அனுப்பி வைக்கப்பட்டு தற்போது பிரேத பரிசோதனை முடிவடைந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது பிரேத பரிசோதனை காரணமாக அரசு மருத்துவமனை பகுதியில் 100 மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *