திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற முதன்மை தளமாகும் இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இங்கு வரும் பக்தர்கள் ஓய்வெடுக்கும் வகையில் மாரியம்மன் மண்டபம் கட்டப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் ஆண்டு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்லும் பழனி, சமயபுரம், திருவண்ணாமலை, திருத்தணி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகளுடன் ரூபாய் 250 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் 1125.93 சதுர மீட்டர் பரப்பளவில் ரூபாய் 3.76 கோடி மதிப்பீட்டில் அமாவாசை மண்டபம் கட்டுவதற்கான பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், கோயில் இணை ஆணையர் கல்யாணி, உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *