திருச்சி மாவட்டம்,சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் இந்தாண்டு ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலிடம் நேரில் பணி ஆணை பெற்ற கோயில் அர்ச்சகரை, சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் காவலர் வரதன் மதுபோதையில், அர்ச்சகரான தன்னை சாதி பெயரை கூறி்திட்டியும்,, வேலையினை விட்டு் விலகுமாறு தொடர்ந்து தன்னை மிரட்டுவதாக ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவியுடன் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அர்ச்சகர் மகேஸ்குமார்.

   இது குறித்து அர்ச்சகர் மகேஸ்குமார் சமயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாவது.

     திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியை சேர்ந்த நான் இந்து பறையன் சாதியைச் சேர்ந்தவர். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருக்கரங்களால் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உப கோயிலான அருள்மிகு முக்தீஸ்வரர் கோயில் அர்ச்சகர் பணி ஆணை பெற்று இக் கோயிலில் பணி புரிந்து வருகிறேன். இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் குடியிருப்பு வளாகத்தில் நானும் எனது மனைவியும் வசித்து வரும் நிலையில் எனது வீட்டின் அருகில் வசிக்கும் 27 வயதான சித்ரா என்ற பெண்ணிற்கும் கோயில் காவலர் வரதன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் சமயபுரம் போலீசார் வரதனை கைது செய்தனர்.

   சமயபுரம் கோயில் காவலர் வரதன்

ஜாமீனில் வெளியில் வந்த காவலர் வரதன் அர்ச்சகர் ஆன எண்ணை எனது சாதியை குறிப்பிட்டும் அர்ச்சகர் பணியில் நீடிக்கக் கூடாது எனவும் அருகிலுள்ள வீட்டாரிடம் நீ பேசக்கூடாது எனவும் தொடர்ந்து என்னை அடையாளம் தெரியாத சிலரோடு சேர்ந்து மதுபோதையில் மிரட்டி வருவது தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 22 ம் தேதி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணி அவர்களிடமும், காவல்துறையினரிடம் புகார் அளித்தேன். புகார் தொடர்பாக இந்நாள்வரை எவ்வித விசாரணையும் இல்லை. இந்நிலையில் 5 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு நானும் எனது மனைவியும் வீட்டில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் போது மதுபோதையில் எனது வீட்டில் அத்துமீறி உள்ளே நுழைந்து என்னையும் எனது மனைவியையும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியும் அர்ச்சகர் வேலையை விட்டு விலகிவிட வேண்டும் எனவும் என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறவேண்டும் எனவும் காவலர் வரதன் என்னை மிரட்டி தாக்க முற்பட்டார்.

 

இதை அறிந்த நானும் எனது மனைவியும் வீட்டைவிட்டு வெளியே உயிர் பயத்தில் ஓடி வந்ததும் தகாத வார்த்தையில் திட்டி இப்போது தப்பி ஓடிவிட்டீங்க புகார வாபஸ் வாங்கலன்னா, உன்னையும் உன் பொண்டாட்டியும் வீட்டோடு பெட்ரோல் ஊத்தி கொளுத்தி உயிரோட எரிச்சிருவேன் என சத்தமாக திட்டவும் வரதனின் குரலை கேட்டு எனது வீட்டின் அருகிலுள்ள மஞ்சுளா மற்றும் சோபியா உள்ளிட்ட சிலர் அவர்களது செல்போனில் வரதனின் செயலை வீடியோ எடுத்தனர். இதனால் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.ஐயா மேற்படி வரதன் உள்ளிட்ட சிலர் என்னை சாதி பெயரை கூறி திட்டியும் , எனது அர்ச்சகர் வேலையை நான் விட்டு விலக வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் தொடர்ந்து என்னையும், எனது மனைவியையும் கொலை செய்வதாக மிரட்டி வரும் வரதன் உள்ளிட்டோர் மீது விசாரணை செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்தும் எனக்கும் என் மனைவிக்கும் தக்க பாதுகாப்பு வழங்கிட வேண்டுமென பணிவுடன் வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார் .

இதுகுறித்து புகார் அளித்த அர்ச்சகர் மகேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் சமயபுரம் கோயில் உப கோயில்களில் நான் உள்ளிட்ட மூன்று அர்ச்சகர்கள், ஒரு ஓதுவார் பணிபுரிந்து வருகிறோம் எங்களை வேலை விட்டு ஓடி விட வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் வரதன் உள்ளிட்ட வெளி ஆட்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் எங்களைத் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் இதுதொடர்பாக சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் திங்கள் கிழமை காலை விசாரணைக்கு வருமாறு சமயபுரம் போலீசார் கூறியுள்ளனர் என தெரிவித்தார்.

இது குறித்து கோயில் இணை ஆணையர் கல்யாணி கூறியதாவது:- 

அர்ச்சகர் மகேஸ்குமாரை மிரட்டியது தொடர்பாக வரதனிடம் விளக்கம் கேட்டு உள்ளேன். குடியிருப்பு பகுதியில் நடக்கும் சம்பவத்திற்கு இணை ஆணையர் நான் என்ன செய்ய முடியும் என்றார்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்