திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.. இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ .83 லட் சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கமும் , 2 கிலோ 667 கிராம் தங்க மும் , 3 கிலோ 121 கிராம் வெள்ளியும் , வெளிநாட்டு பணம் 104 – ம் கிடைத்தது. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி காணிக்கை என்னும் பணியினை சிசிடிவி காட்சியில் பார்த்த கொண்டிருந்த போது அதிர்ச்சி அடைந்தார். அந்த சிசிடிவி காட்சியில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றி வேல் என்பவர் யாரும் பார்க்காத நேரத்தில் சுமார் 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் மறைத்து வைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் கண்காணிப்பாளர் அழகர்சாமி தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து 1.50 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க நாணயங்களை திருடிய செயல் அலுவலர் வெற்றி வேலிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்தார். இதுகுறித்து அறிந்த செயல் அலுவலர் வெற்றிவேல் தற்போது தலைமறைவாகியுள்ளார். சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையை கோவில் செயல் அலுவலரே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்