சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும், முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனாக அழகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் கோவில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி விட்டு செல்வார்கள்.

கடந்த 14 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை உண்டில்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் தன்னாலர்கள், வங்கி ஊழியர்களால் இன்று கோவில் மண்டபத்தில் எண்ணப்பட்டது.இதில் ரூ 74 லட்சத்து, 62 ஆயிரத்து 695 ரூபாய் ரொக்கமும், 2 கிலோ 515 கிராம் தங்கம், 3 கிலோ 990 கிராம் வெள்ளி, 150 அயல்நாட்டு நோட்டுகள், 936 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பெறப்பட்டன என கோயில் இணை ஆணையர் கல்யாணி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *