புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா செல்லம்பட்டி அருகில் உள்ள ராயம்பட்டி மேட்டில் பொதுமக்களுக்கு சர்க்கஸ் காட்டி வித்தை செய்து பிழைப்பு நடத்தும் சுமார் 30 குடும்பங்கள் இந்த கொரோனா காலத்தில் எந்த பிழைப்பும் இல்லாததால் குழந்தை குட்டிகளை வைத்து கொண்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இவர்களின் பரிதாப நிலை குறித்து நெற்றிக்கண் அலுவலகத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த அமமுக பிரமுகர் ஒருவர் மூலம் தகவல் அளிக்கப்பட்டது.

உடனடியாக நெற்றிக்கண் பத்திரிக்கை வார இதழ் சார்பாக நிருபர்கள் வால்மிகி , நந்தகுமார் ஆகியோர் 50 கிலோ அரிசி மற்றும் மளிகை, காய்கறி பொருட்களை எடுத்துக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சென்று சர்க்கஸ் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து பொருட்களை கொடுத்தனர். அந்த பொருட்களை பெற்று கொண்ட அவர்கள், நிருபர்கள் வால்மீகி, நந்தகுமார் மற்றும் நெற்றிக்கண் நிர்வாகத்துக்கும் மகிழ்ச்சி பொங்க தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில்

கடந்த இரண்டு வருடமாக எந்த தொழிலும் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து பசியும் பட்டினியுமாக போராடி வாழ்ந்து வந்தோம். கடந்த வருடம் கொரோனா காலகட்டத்தில் அதிமுக அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் உதவி செஞ்சாரு, ஆனால் இந்த வருடம் கொரனாவில் எங்களை யாரும் கண்டு கொள்ளவில்லை. தற்போது நெற்றிக்கண் வார இதழ் நிருபர்கள் வால்மீகி நந்தகுமார் ஆகியோர் செய்த உதவிகள் தான் தற்போது எங்களுக்கு கிடைத்த ஒரே ஆறுதல். வேறு கட்சிகளோ அரசு அமைப்புகளோ யாரும் எங்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *