சவூதி அரேபியா தம்மாம் பகுதியில் வேலை செய்து வந்த விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவரின் மகன் சத்தியமூர்த்தி (49), மனைவியின் பெயர் சுப்புலட்சுமி இவர்களுக்கு 1 மகன் உள்ளனர். சத்தியமூர்த்தி என்பவர் ரியாத்தில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்த நிலையில் ஏப்ரல் மாதம் 8ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

வெளிநாட்டில் மரணமடைந்த தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவுமாறு அவருடைய உறவினர்கள் விருதுநகர் மாவட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். உடனே எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் ரியாத்தில் உள்ள இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி செய்யும்மாறு கேட்டு கொண்டனர். இந்தியன் சோசியல் ஃபோரம் நிர்வாகிகள் எடுத்த தொடர் முயற்சியின் பலனாகவும் இந்திய தூதரகத்தின் உதவியினாலும் இறந்த சத்தியமூர்த்தியின் உடலை தாயகத்திற்கு 2022 ஏப்ரல் 25ம் தேதி திருச்சி வந்த ஷிலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் மாலை 3-30 மணியளவில் திருச்சி விமானநிலையத்திற்கு அவரது புதஉடலானது வந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஏர்போர்ட் மஜீத் தலைமையில், விருதுநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்பாஸ், தொண்டரணி மாவட்ட தலைவர் அன்சாரி, டோல்கேட் கிளை தலைவர் PKM பாஷா, ஏர்போர்ட் கிளை பிரதிநிதி ஹக்கீம் ஆகியோர் இன்று மாலை திருச்சி விமான நிலையம் சென்று இறந்த சத்தியமூர்த்தியின் உடலை பெற்று அவருடைய சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, அவரின் உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக செயல்பட்டு இறந்த உடலை தாயகம் அனுப்ப உதவி செய்த இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகளுக்கும், SDPI கட்சியின் நிர்வாகிகளுக்கும் சத்தியமூர்த்தி அவர்களின் குடும்பத்தார் தங்களது நன்றியினை தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *