பெரம்பலூர் குன்னம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் வயது 38 என்பவர் நேற்று ( 26.11.22 ) -ந்தேதி திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கண்ணப்பா ஹோட்டல் அருகில் வெளிநாடு செல்வதற்காக ஏஜன்ட் அலுவலகத்திற்கு வந்தபோது கடையின் அருகே சாலை ஓரத்தில் கிடந்த சுமார் 5 / 4 பவுன் தங்க சங்கிலியை கண்டு எடுத்துள்ளார் .

அதன்பின்னர் திருச்சி மாநகரம் உறையூர் காவல்நிலையத்தில் தங்க சங்கிலியை ஒப்படைத்துள்ளார் . இதனை அறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் சுரேஷ்குமார் தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் அடுத்தவரின் நகைக்கு ஆசைப்படாமலும் , நேர்மை தவறாமல் சாலையில் கீழே கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை காவல்நிலையத்தில் ஒப்படைத்தற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அவரை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *