தமிழகத்தில் கொரோனா நோய் தோற்ற அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இன்று முதல் கூடுதல் கட்டுப்பாட்டுகளுடன் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக தனியாக செயல்படுகின்ற மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் விற்பனை செய்யும் கடைகள் ஆகியவை மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில் , தற்போது இந்தக் கடைகள் அனைத்தும் காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் இயங்க இன்று முதல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது .
இவற்றில் , ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் . Dunzo போன்ற மின் வணிக நிறுவனங்கள் ( e – commerce ) மூலம் மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய காலை 06.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் . மேற்கூறிய மளிகை , பலசரக்குகள் , காய்கறிகள் , இறைச்சி , மீன் கடைகள் தவிர , இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது . மேலும் இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காந்தி மார்க்கெட் பகுதியில் தரை கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 10 மணிக்கு மேல் ஊரடங்கு என்பதால் போலீசார் காந்தி மார்க்கெட் பகுதியில் போட்டிருந்த காய்கறி கடைகளை அப்புறப்படுத்த வியாபாரிகளிடம் கூறினர். சிலர் அப்புறப்படுத்தினர் சிலர் தங்களுக்கு வியாபாரம் இன்னும் நடக்கவில்லை எனக் கூறி விற்பனைக்காக கொண்டு வந்த காய்கறி மூட்டைகளை சாலையில் வீசி சென்றனர். வீசி சென்ற காய்கறிகளை சிலர் அள்ளிச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.