சாலையோர தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க வந்த திருச்சி மாவட்ட தரைக்கடை , சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர். 

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான தரைக்கடை வியாபாரிகள் தள்ளுவண்டியிலும் தரைக்கடை போட்டும் வியாபாரம் செய்து வருகிறார்கள் . இதில் தரைக்கடை வியாபாரிகளை கணக்கெடுத்து 1750 பேருக்கு அடையாள அட்டை வழங்கியும் மீதம் 1000 பேருக்கு வழங்க போவதாகவும் பத்திரிக்கை செய்தியினை பார்த்தோம் . மகிழ்ச்சியே . ஆனால் ஏற்கனவே அடையாள அட்டை வழங்கியவர்களுக்கான கால கெடு முடிவடைந்துவிட்டது . அந்த வியாபாரிகளுக்கும் புதிதாக அடையாள அட்டை வழங்கியும் . கணக்கெடுப்பில் விடுபட்ட மற்ற வியாபாரிகளையும் , மீண்டும் கணக்கெடுத்து அவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க ஆவண செய்யக் கோரி திருச்சி மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்த திருச்சி மாவட்ட தரைக்கடை , சிறுகடை வியாபாரிகள் சங்கத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *