சி ஐ டி யு திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செயலாளர் சங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளாக:-

CITU திருச்சி தாலுகா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சி ராம்ஜிநகர் ஸ்ரீ உமா பரமேஸ்வரி மில்ஸ் லிமிடெட் பஞ்சாலையில் பணிபுரிந்த 820 தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த… பி.எப்./ கிராஜிவிட்டி, சொசைட்டி இவைகளுக்கு பிடித்தம் செய்த15 கோடி ரூபாயை தொழிலாளர்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுக்க கோரியும், ஸ்ரீ உமா பரமேஸ்வரி பஞ்சாலை நிறுவனத்திற்கு சொந்தமான நிலங்களை ஏலம் விட்டு பணத்தினை கட்ட தவறிய M/S. Phoenix ARC Private Ltd.,| நிறுவனத்தையும்,

இதற்கு ஆதரவாக செயல்படும் கலைத்தல் அதிகாரி (The Afficial Liquidation) அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *