கடந்த 08-ம் தேதி திருச்சியில் வசிக்கும் 15 வயது சிறுமியை ஏமாற்றி கட்டாயபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்தும் , அதனை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டியும் , வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பிரகாஷ் வயது 22 மற்றும் பரத் வயது 21 ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . மேலும் விசாரணையில் குற்றவாளி பரத் என்பவர் மீது கடந்த 2021 ம்ஆண்டு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு , வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது .

எனவே , குற்றவாளிகள் பிரகாஷ் மற்றும் பரத் ஆகியோர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவர்கள் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளிகள் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள் . அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் . மேலும் , திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published.