திருச்சியில் கடந்த 04.11.2021 தேதி கே.கே நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாத்தனூர் குளத்தில் எடமலைப்பட்டிபுதூர் சேர்ந்த அப்துல் ரகுமான், சவுக்கத் அலி, அபு ஆகியோர் குடும்பத்துடன் குளிக்க சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கி கைகளை அசைத்த நிலையில் உயிருக்கு போராடியவர்களை, அவ்வழியாக ரோந்து பணி மேற்கொண்ட தலைமை காவலர் செல்வ சாமிநாதன் மற்றும் பெண் முதல்நிலை காவலர் அறிவுச்சுடர் ஆகியோர் உயிருக்கு போராடியவர்களை கண்டவுடன் தன் உயிரையும் துச்சமென நினைத்து நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவரையும் மீட்டு பொதுமக்கள் உதவியுடன் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்க்கப்பட்டார்கள். சிறுவன் அப்துல் ரகுமான் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு தற்போது குணமாகி வீடு திரும்பினார். அப்துல் ரகுமான் அவர்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கே.கே.நகர் காவல் நிலையம் வந்து தங்கள் பிள்ளைகள் உயிரை காப்பாற்றிய காவலர்கள் செல்வசாமிநாதன் மற்றும் அறிவு சுடர் ஆகியோருக்கு ஆய்வாளர் முன்னிலையில் பாராட்டி தங்களது நன்றியினை தெரிவித்தனர். மேலும்தன் உயிரையும் துச்சமென நினைத்து சிறுவர்களை காப்பாற்றிய தலைமை காவலர் செல்வ சுவாமிநாதன் மற்றும் பெண் காவலர் அறிவுச்சுடர் ஆகியோரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.