சிவாஜி சமூக நல பேரவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலை பிரிவு சார்பில் நடிகர் சிவாஜியின் 22-ஆம் ஆண்டு நினைவேந்தல் கவியரங்கம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது. சிவாஜி சமூக நலப் பேரவை மாநில துணைத்தலைவரும், திருவரங்கம் கோட்ட காங்கிரஸ் தலைவருமான சிவாஜி சண்முகம் வரவேற்று பேசினார் மாநில கலைப் பிரிவு துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.
இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஜவகர், வக்கீல் கோவிந்தராஜன், , மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.முரளிதரன், வக்கீல் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து கவிஞர் கோவிந்தசாமி தலைமையில் கவியரங்கம் நடந்தது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் சிவாஜி சமூக நல பேரவை மாவட்ட தலைவர் சோனா. ராமநாதன் நன்றி கூறினார். கூட்டத்தில் திருச்சி பாலக்கரையில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலையை திறக்க முதலமைச்சரிடம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அமைச்சர் கே.என்.நேருவுக்கு சிவாஜி ரசிகர்கள்மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தென்னூர் ஜெயபிரகாஷ், பீமநகர் நாராயணசாமி, கோட்ட தலைவர்கள் மலைக்கோட்டை ரவி, பாலக்கரை ஜெரால்டு, காட்டூர் ராஜா டேனியல் ராய், ஜங்சன் பிரியங்கா பட்டேல், பண்ணை கோபாலகிருஷ்ணன், ராஜா நசீர் ,உறையூர் எத்திராஜ், சிவா, நிர்வாகிகள் சரவணன், பத்மநாபன், வடிவேல், கார்த்திகேயன், பண்ண சரவணன், தியாகராஜன், சக்தி, சிவந்தலிங்கம், முருகேசன், சீலா செலஸ் ,விஜயலட்சுமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.