திருச்சி வரகனேரியில் உள்ள சுதந்திரப் போராட்டத் தியாகி வ.வே.சு.அய்யர் அவர்களின் நினைவில்லத்தில், அவரது 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து வ.வே‌சு.அய்யர் நினைவில்லத்தினையும், அதில் செயல்பட்டு வரும் நூலகத்தினையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து வ.வே.சு. அய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவி ரூபஸ்ரீயும், அவர் எழுதிய குளத்தங்கரை அரசமரம் என்கிற கதை விளக்கத்தினை மாணவி மித்ரவிந்தாவும், தமிழ்மொழி சிறப்பு குறித்து மாணவி விஜயலெட்சுமியும் உரையாற்றினர். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலக உதவி இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார், மாநகராட்சி உதவி ஆணையர் ரவி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் சுதாகர், வட்டாட்சியர் கலைவாணி, கிளை நூலகர் செந்தில் குமார், வாசகர் வட்ட நிர்வாகிகள் குமாரவேல், மாரிமுத்து, பொன் குணசீலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *