அக்டோபர் 4 முதல் 10 வரை உலக விண்வெளி வாரம் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு இஸ்ரோ மற்றும் திருச்சி ஜமால் முகமது கல்லூரி இணைந்து நடத்திய கண்காட்சி நடைபெற்றது இதில் இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் குமார், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு அறிவியல் துறையில் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை கட்சி படுத்தினர். இதில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ இணை இயக்குநர் செந்தில் குமார் கொரும்போது : இந்த நிகழ்ச்சி மூலம் கணிதம், அறிவியல் , தொழில் நுட்பம், பொறியியல் துறையில் ஆர்வமாக ஈடுபடுத்த இந்த நிகழ்ச்சி உதவும் என்றார்

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் தளம் அதில் இருந்து வெளிவந்த பிராக்யான் ரோவர் தனது வேலையை பூமி கணக்கின் படி 14 நாள் நிலவின் கணக்கு படி 1 நாள் திட்டமிட்ட செயல்பாடுகளை செய்து பல்வேறு தரவுகளை தந்து விட்டு ஓய்வெடுத்து கொண்டது‌ ஆதித்யா வெற்றிகரமாக போய்கொண்டு உள்ளது பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் போய் நிற்கும் அது எந்த குறைபாடும் இல்லாமல் இயங்கிகொண்டு உள்ளது ஜனவரி முதல் வாரம் “லாக்ரேஞ்ச் பாயின்ட் எல்1” சென்றடையும் அதனை தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கும் அது இந்தியா மட்டும் இன்றி உலகத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் இதன் முழு பயனை இன்னும் ஒரு வருடத்தில் பார்க்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *