சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் தனம் மற்றும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் டிக் டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-

தனது பிள்ளைகள் ஆன்லைன் வகுப்பு படிக்கும் போது சமூகவலை தளங்களில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூரியாவின் ஆபாசமாக பேசும் வீடியோக்கள் அடிக்கடி வந்தது. இதனால் ரவுடி பேபி சூர்யாவை தொடர்பு கொண்டு பேசியபோது என்னை மிகவும் ஆபாசமாக பேசினார். அதுமட்டுமல்லாமல் எனது நம்பரை சமூக வலைத்தளங்களில் விபச்சாரி என கூறி பதிவு செய்துள்ளார்.

 

அதேபோல் கஷ்டத்தில் சிக்கி தவிக்கும் பெண்களை குறிவைத்து அதிக பணம் தருவதாக கூறி சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்கிறார். என்னை பற்றி யாரிடம் சொன்னாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார். பல அமைச்சர்களின் பின்புலம் அவருக்கு உள்ளது. இவர் மீது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரவுடி பேபி சூர்யா குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. உடனே ரவுடி பேபி சூர்யாவை கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *