திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தமிழக திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே நேரு சிறப்புரையாற்றினார்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:- 

மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு திமுக கழகத்தின் முதன்மைச் செயலாளராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

வருகின்ற 4-ம் தேதி திருச்சியில் தமிழ்நாடு காகித ஆலை இரண்டாவது யூனிட் துவக்கி வைக்க திருச்சிக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்து. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான திமுக கழகத்தினர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிடும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கமிட்டி அமைத்து தேர்தல் பணியினை விரைவாக தொடங்கிட வேண்டுமென கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இதர பணிகளுக்கு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் மாதம் 12 13 மற்றும் 26 27 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது இந்த சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் எம்ஏல்ஏகள் பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் பரணிகுமார், அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பகுதி செயலாளர்கள் காஜா மலை விஜி, முத்து செல்வம் மற்றும் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *