இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதி குழு கூட்டம் உறையூரில் துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.மாநகர் மாவட்ட முன்னாள் சுரேஷ் பங்கேற்று உரையாற்றினார். இக்கூட்டத்தின் தீர்மானமாக.ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 நாடு தழுவிய போராட்டத்தையொட்டி தமிழகத்தில் திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு பகுதி குழு உறையூர் களத்துமேடு, குறத்தெரு,, நாச்சியார்கோவில் சந்திப்பு, புத்தூர் ஆகிய பகுதிகளில் கருப்புக்கொடி ஏந்தி முழக்க போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது. மேரிஸ் மேம்பால பழுதுபார்த்தல் பணிகளை விரைந்து முடித்து பொதுப் போக்குவரத்துக்கு திறந்து விட வேண்டும், மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள உறையூர் பாளையம் பஜார் சாலை, கோணக்கரை சாலை ஆகியவற்றை தரமான தார் சாலை விரைவில் அமைத்துத்தர மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில்பகுதி செயலாளர் பாலமுரளி துணைச் செயலாளர் சரண்சிங் பொருளாளர் ரவீந்திரன் பகுதி குழு உறுப்பினர்கள் முருகன், ஆனந்தன், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.