பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டந்தோறும் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்திவருகிறார். அதன்படி திருச்சி வயர்லெஸ் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் சிடி.ரவி, மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சிபி.ராதாகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன், மாநில துணைத் தலைவர் நரேந்திரன். மாவட்ட தலைவர் ராஜெஸ்குமார், மகளிர் அணி மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசிய பொதுச் செயலாளர் ரவி கூறுகையில்

 

செப்டம்பர் 17ம் முதல் அக்டோபர் 7ம் தேதி வரை சேவா சமர்பன் பிரச்சாரம் துவக்கப்படும். திமுக அரசு இந்து மதத்திற்க்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் இந்து கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் பாதிக்கும் மேற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. வரும் நாட்களில் பாஜக அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கும். திமுக எப்பொழுதும் நிலையான நிலைபாடில்லாத மனநிலையில் மக்களை குழப்பி வருகிறது, எப்பொழுதும் மத்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் மனநிலையிலேயே இருக்கின்றனர். ஆனால் மத்திய அரசு தமிழ்நாடு மக்களுக்கும் தமிழ்நாட்டிற்க்கும் நிறைய வளச்சித்திட்டங்களை கொடுத்துள்ளது. மத்திய மோடி அரசு தமிழகத்திற்கு மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு 700 சிறைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்திய நாட்டிற்கே பேராபத்தை விளைவிக்கும். அதேபோல் மூன்று வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை தரக்கூடிய திட்டமாகும், ஆனால் எதிர்கட்சிகள் இணைந்து பொய்யான தகவல்களை பொதுமக்களிடமும் விவசாயிகள் மத்தியிலும் பரப்பிவருவதாக குற்றம் சாட்டினார். சென்ற வருடம் தமிழ்நாட்டில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வெழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர், திமுகவின் நீட் எதிர்ப்பு மசோதாவால் மாணவர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. உள்ளாட்சி தேர்தலில் அதே கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு பாஜகவின் மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.