திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் அதன் செயலாளர் நல்லுசாமி தலைமையில்  நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவது இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செயலாளர் நல்லசாமி கூறும்போது:

தமிழக அரசு, கள்ளை உணவாக அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி ஜனவரி 21ம் தேதி முதல், தமிழகம் முழவதும் 1,000 கணக்கான இடங்களில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும் என்றார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளன இதில் சம்பள கமிஷன் பரிந்துரையை ஏற்று நடத்துவதை போல விவசாய கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்படுத்த வேண்டும் , இந்திய விவசாய நாடு விவசாய விளை பொருட்களை ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை பெருக்க வேண்டும் ,கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சனைகள் கோரிக்கை இடம்பெற வேண்டும் அப்படி இடம்பெற்ற பரிசீலித்து வாக்களிக்க எதுவாக இருக்கும் என்றார்

மேலும் தமிழக அரசு 28 ஆண்டு கால சட்ட போராட்டத்தின் போது, இந்த வழக்கை சரியான இலக்கை நோக்கி கொண்டு செல்லவில்லை. தினமும் காவிரி நீர் பங்கீடு என்ற இலக்கை முன்னிறுத்தி இந்த வழக்கை கொண்டு சென்று, அதற்கான தீர்ப்பை பெற்றிருந்தால், இரு மாநில உறவு கெடுவதற்கோ மோதல் போக்கிற்கோ இறையாண்மை, ஒருமைப்பாடு கேள்விக்குறியாவதற்கோ வாய்ப்பு இருந்திருக்காது. தினமும் தண்ணீர் திறப்பு என்ற அம்சம், தீர்ப்பில் இடம் பெற்றிருந்தால், மேகதாதுவில் அணை கட்டும் எண்ணம் கர்நாடகாவுக்கு வந்திருக்காது. எனவே தினமும் நதிநீர் பங்கீடு என்ற அம்சம் இருந்திருந்தால், இரண்டு மாநிலங்களுக்கும் சுமூகமான நிலை இருந்திருக்கும் என்றார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *