புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி வரன்முறை செய்திட வேண்டும், தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 4.5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும், ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் முதல்வரிடம் வழங்கப்பட்ட ஜாக்டோ- ஜியோ அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றி விட வேண்டும் என வலியுறுத்தி
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக திருச்சியில் வெஸ்ட்ரி பள்ளி வாயிலில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.