திருச்சி ஜாமிஆ ஹஜ்ரத் நத்ஹர்வலி தர்கா நிஸ்வான் மதரஸா 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நத்ஹர்வலி தர்கா வளாகத்தில் தர்கா தலைமை அறங்காவலர் ஏ.அல்லாபக்ஷ் தலைமையில் நடைபெற்றது. மதரஸா உஸ்தாத் முஹம்மத் யூனுஸ் கிராத் ஓதினார். ஹாபிழ் ஷேக் அப்துல்லா கீதம் ஒதினார். மதரஸா முதல்வர் சாபிரா பீ பள்ளிவாசல் தலைமை இமாம் சையத் முனாப் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்.
தர்கா பொது அறங்காவலர் சையத் சலாவுதீன் வரவேற்புரை ஆற்றினார் தமிழ்நாடு வக்ப வாரிய தலைவர் முனைவர் அப்துல் ரஹ்மான் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். உஸ்மானியா அரபி கல்லூரி முதல்வர் எஸ்.எஸ்.ஹைதர் அலி மிஸ்பாஹி பட்டம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில செயலாளர் காயல் மஹபூப், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபிப்ரகுமான்,விழாவில் துருப்பு பள்ளிவாசல் தலைமை இமாம் வசிம் தாவுதி, உமர்பாருக் தாவூதி காந்தி மார்கெட் வட்டார ஜமாத்துல் உலமா செயலாளர் ஜியபுரம் அப்பாஸ்கோம்பை நிஜாமுதீன் அலி, சையத் ஜாபர் சாதிக் வசிம், 21வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம், தர்கா கலிபா சையத் ஷாதாத், உட்பட பலர் கலந்துகொண்டனர்