திருச்சி மாவட்டம் முசிறியில் பெட்ரோல் பங்கில் ஜீப்பிற்கு டீசல் போட்டுவிட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டு வைத்து மடக்கிப் பிடித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார்.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்தவர் ஜவகர்லால் நேரு மகன் சண்முகம் (48). ஜீப்பில் வந்த இவர் முசிறியில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ. 2 ஆயிரத்திற்கு டீசல் போட்டுள்ளார்.பின்னர் பணம் கொடுக்காமல் ஜீப்பை எடுத்துக் கொண்டு திருச்சியை நோக்கி தப்பியுள்ளார்.இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவலறிந்த போலீசார் மண்ணச்சநல்லூர் அருகே குணசீலம் திருச்சி சேலம் சாலையில் பேரிகார்டு வைத்து ஜீப்பை மடக்கிய போது இடித்து தள்ளிவிட்டு தப்பிச் செல்கிறார்.பின்னர் போலீசார் தகவல்படி நெச்சியம்,சமயபுரம் நம்பர் 1 டோல்கேட்டில் போலீசார் மடக்கிய போதும் அங்கிருந்தும் தப்பிச் சென்று லால்குடியை நோக்கி தப்பிச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து லால்குடி நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் உதவி ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் காவலர்கள் ராஜா உள்ளிட்டோர் லால்குடி ரவுண்டானாவில் பேரிகார்டை வைத்து ஜீப்பில் தப்பிவந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.நடு இரவில் டீசல் போட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபர் பல்வேறு இடங்களில் சினிமா பாணியில் மடக்கி பிடித்த போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த நபர் இறுதியாக லால்குடியில் சிக்கினார். அவரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நள்ளிரவில் பல்வேறு இடங்களில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பிச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *