தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற 7-ம் தேதி காலையுடன் முடிவடையும் நிலையில், புதிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அதன்படி வருகிற ஜூன் 7-ந் தேதி முதல் காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். பழங்கள், பூகடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் இயங் அன்னுமதி வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *