திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர் பொறியாளர். இப்ராம்ஷா தலைமையில், திருச்சி மேல சிந்தாமணி பகுதியில் உள்ள, தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமை, அதிமுக மாநில மாணவரணி செயலாளர், முன்னாள் எம்பி. எஸ்.ஆர் விஜயகுமார் துவக்கி வைத்தார்.

இந்த முகாமில், இரத்த அழுத்தம் கண்டறிதல், எடை கண்டறிதல், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறிதல், இருதய சுருள் படம் அறிதல் உள்ளிட்ட பரிசோதனைகளும், எலும்பு மருத்துவம், புற்றுநோய் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 3 மருத்துவர்கள், 7 செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் 15 பேர் என மொத்தம் 25 பேர் மருத்துவ முகாமில் பங்கேற்று சிகிச்சை அளித்தனர்.

இந்நிகழ்வில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.பி குமார், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன்,

முன்னாள் எம்.பி ரத்தினவேல், அம்மா பேரவை மாநில துணை செயலாளர் அரவிந்தன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி கழக செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, ஏர்போர்ட் விஜி, பொன்னர் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *