டாக்டர் அம்பேத்காரின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் அம்பேத்காரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்….

இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன்,மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன், சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்காதேவி,பகுதி செயலாளர்கள் கண்ணன்,மோகன்தாஸ், இளங்கோ,காஜாமலை விஜி, ராம்குமார், வழக்கறிஞர் பாஸ்கர், டோல்கேட் சுப்பிரமணி உட்பட ஏராளமான திமுகவினர் அம்பேத்காரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்