திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை 06.05.2021 முதல் காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது.

கொரொனா வைரஸ் நோய்த்தாக்கம் தினமும் அதிகரித்து வருகிறது . மத்திய சுகாதார அமைச்சகம் வழிகாட்டுதலின்படி கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது . டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நமது மாவட்டத்தில் நாளை 06.05.2021 முதல் 20.05.2021 வரை காலை 8 மணி முதல் நன்பகல் 12 மணி வரை மட்டுமே அனைத்து டாஸ்மாக் கடைகளும் செயல்படும் . ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை முன்னிட்டு எந்தவிதமான டாஸ்மாக் கடைகளும் செயல்படாது என மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *