திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்சி பழைய பால்பண்ணை நால்ரோடு தஞ்சை சாலையில் இங்கி வரும் AC பார் & டாஸ்மாக் மதுபானகடைக்கு வரும் மது பிரியர்களால் (குடி மகன்களால்) தஞ்சை சாலையில் பல நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் நிருத்தப்படுவதால்‌ அந்த தஞ்சை சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மேலும் மது பிரியர்கள் போதையில் ஒரு வழிப்பாதையை கடப்பதால் தினமும் சிறு சிறு விபத்துகள் நடக்கிறது. இன்னும் சில நாட்களில் பண்டிகை காலம் வர இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் இந்த வழிப் பாதையில் சென்று வருகின்றன. இந்நிலையில் டாஸ்மாக் கடை வெளியிலேயே குடிமகன்கள் திறந்த வெளியில் மது அருந்துவதால் அவ்வழியாக நடந்து செல்லும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் பெரியவர்கள் இதனைக் கண்டு முகம் சுளிக்க வைக்கிறது. உடனடியாக டாஸ்மாக் நிர்வாகம் அங்கு செயல்படும் கடையை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், குறிப்பாக தமிழகத்தில் மிகச் சிறப்பாக ஆட்சி செய்யும் திமுக அரசுக்கும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் கலங்கம் ஏற்படும் வண்ணம் இந்த டாஸ்மார்க் கடை செயல்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை என்றால் மிக விரைவில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் டாஸ்மாக் கடை முற்றுகை மறியலா போராட்டம் நடத்தப்படும் என திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *