1992ம் ஆண்டு டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டம் பாலக்கரை ரவுண்டானவில் இன்று (டிச.06) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொது செயலாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி தமிழ் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட தலைவர் சபியுல்லா, SDPI கட்சி வடக்கு மாவட்ட தலைவர் முபாரக் அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள் ஆகியோர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.

SDPI கட்சியின் தெற்கு மாவட்ட துணை தலைவர் பிச்சைக்கனி, மாவட்ட செயலாளர்கள் ஏர்போர்ட் மஜீத், மதர் ஜமால், மாவட்ட பொருளாலர் சுஹைப் அவர்களும், மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாபர் மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடு என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. திருச்சி தெற்கு மாவட்டம் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக பெண்கள், குழந்தைகள் உட்பட 1200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.