வருகிற 30-ஆம் தேதி தமிழக முதல்வர் திருச்சியில் முடிவுற்ற பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய நலத் திட்டங்களை துவக்கி வைக்க உள்ளார். அப்போது திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு ரூபாய் 400 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, முடிவுற்ற திருச்சி சத்திரம் புதிய நிலையத்தை திறக்க வைக்க உள்ளார். இன்று காலை நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சத்திரம் பேருந்து நிலையத்தில் முடிவுற்ற பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  சத்திரம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பயன்பாட்டிற்காக ஏற்கனவே கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான உடை மாற்றும் அறை குளிப்பதற்கான இடங்களை மூன்றாவது தளத்தில் கட்டித்தரப்படும். ஆனால், அவற்றை இலவசமாக அல்ல அதற்குரிய பணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ளலாம். திருச்சி நடைபெறும் பல்வேறு கட்ட பணிகளில் வடநாட்டை சேர்ந்த சிறுவர்கள் பயன்படுத்தி வருவதாக எழுப்பிய கேள்விக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் அதற்கு நடவடிக்கையை மேற்கொள்வார் எனத் தெரிவித்தார்.

திருச்சி மாநகரில் வருகிற 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூபாய் 400 கோடி செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைக்க உள்ளார். ரீடைல் மார்க்கெட் தற்போது கோயம்பேடு மார்கெட்டை போல பெரிய அளவில் செயல்படுத்த உள்ளோம். பெரிய அளவில் பேருந்து நிலையம் வர இருக்கிறது. இதற்காக எலிவேட்டர் ஹைவே அண்ணாசிலையில் இருந்து குடமுருட்டி செல்வதற்கு பதிலாக நான் அண்ணாசிலையில் இருந்து நேராக மத்திய பேருந்து நிலையம் செல்வது மிகவும் வசதியாக இருக்கும் என நான் கேட்டுள்ளேன். துறையில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கள்ளிக்குடி செல்வதற்கு எந்த வியாபாரி விரும்பவில்லை. ஏற்கனவே, அவர்கள் கட்டி விட்டார்கள். அதற்குரிய வல்லுநர்கள் யோசனை செய்து மாற்று ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார். அனைத்து நடத்துநர்களும், ஓட்டுனர்களும் பயன்படுத்தும் வகையில் அறையை குளிப்பதற்கும், ஓய்வு எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி தியாகராஜன்,முன்னாள் மாநகராட்சி துணை மேயர் அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *