காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று அண்ணல் காந்திஜியின் சத்யாகிரகம் வழியில் ஜனநாயகத்தை காப்பாற்ற டெல்லியில் உயிர் தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சின்னக்கடை வீதி பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாக காங்கிரஸார் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்டத் தலைவர் தொட்டியம் சரவணன் மாவட்ட துணைத் தலைவர்கள் சிந்தாமணி செந்தில்நாதன் மலைக்கோட்டை முரளி வர்த்தகப் பிரிவு கணேசன் பஜார் மைதீன் மாவட்ட செயலாளர் மாரிமுத்து இளைஞர் காங்கிரஸ் விமல் ரபீக் நிர்மல் குமார் சந்துகடை தியாகராஜன் வக்கீல் கோகுல் அரியமங்கலம் சுதாகர் தியாகராஜன் சேவா தலம் அப்துல் குத்தூஸ் ஜெகதீஸ்வரி சம்சுதீன் மகளிர் காங்கிரஸ் அஞ்சு மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார்இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *