தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்திருச்சி – கரூர் பைபாஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணைகட்ட கூடாது,100 நாள் வேலையாட்களை மழைக்காலங்களில் விவசாயத்திற்கு அனுப்ப வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் *Scale of finace* அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையை VAO வழங்கும் அடங்கல் சான்றிதழ்படி வழங்க வேண்டும், 500 ஏக்கருக்கு ஒரு *DPC*-யும் (அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்), ஒரு நாளைக்கு 3000 மூட்டை நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கொள்முதல் செய்யும் நெல்லுக்கு விவசாயிகளிடம் லஞ்சம் கேட்க கூடாது,

2016-ல் விவசாயிகள் வாங்கிய குறுகியகால கடனை மத்தியகால கடனாக மாத்திவைத்துள்ளதை தள்ளுபடி செய்ய வேண்டும் கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கினால் மட்டுமே VAO குத்தகைதாரருக்கு அடங்கல் வழங்க கூடாது என்று சொல்லலாம் வெறும் வழக்கு தொடுத்தால் மட்டும் வழங்க முடியாது என்று மறுக்க கூடாது. கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லி சென்று போராடுவது உள்ளிட்ட தீர்மணங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் தஞ்சை மஹேந்திரன், ஒரத்தநாடு தங்கமுத்து, முசிறி கார்த்திகேயன், திருச்சி மேகராஜன், கரூர் தட்சிணாமூர்த்தி, மாநில செய்தி தொடர்பாளர்கள் பிரேம்குமார், வரபிரகாஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு.

1882க்கு முன்பு தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்துகொண்டிருந்தேம், கர்நாடகா வெறும் 90 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்தது. 1892ல் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டக்கூடாது என்று ஒரு ஒப்பந்தம் உள்ளது. 1924க்குப் பின்பு 5லட்சத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்தனர். மீதி தண்ணீரை தமிழகத்திற்கு கொடுத்தனர். அப்போது கர்நாடகா கிருட்டிணராசா சாகர் அணையும், தமிழகம் மேட்டூர் அணையை கட்டி கொண்டோம். 1974க்கு பிறகு கர்நாடகாவில் 25அணைக் கட்டப்பட்டுள்ளது. தற்போது 28 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிறார்கள். நமக்கு தண்ணீர் திறந்து விடுவதில்லை. உச்சநீதிமன்றம் சொன்னாலும் சரி, காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னாலும் சரி மாதம் மாதம் தண்ணீர் திறந்து விட மாட்டார்கள்,

இந்தக் கொடுமையை கண்டித்து வாரணாசியில் தேர்தலில் போட்டியிட போகிறோம் என சொன்னபோது காவிரி கோதாவரி இணைப்பதாக வாக்குறுதி அளித்தனர் ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதையெல்லாம் கண்டித்து குறைந்தபட்சம் 500 விவசாயிகள் டெல்லி சென்று உத்தரபிரதேச மக்களே இந்தியாவில் 130 கோடி மக்களில் 90 கோடி விவசாயிகள் ஹிந்துக்கள் இதில் 85கோடி விவசாயிகள் இந்து விவசாயிகள் எங்களை காப்பாற்ற மறுக்கும் அரசை பாருங்கள் பாருங்கள் என்று டெல்லியில் போராடப் போகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *