இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரிய மிளகுபாறையல் உள்ள அலுவலகத்தின் முன்பு மாவட்ட செயலாளர் திராவிடமணிதலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கும் தடுப்பூசியின் அளவை அதிகப்படுத்தி தரவேண்டும்,செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழக அரசிடம் வழங்க வேண்டும்.பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும்கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட செயலாளர் சுரேஷ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவசூரியன், இந்திய மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் இப்ராஹிம். வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ்நாடெங்கும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி உறையூரில் பகுதி குழு உறுப்பினர் ஆனந்தன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உரையாற்றினார். மேற்கு பகுதி குழு உறுப்பினர் துரைராஜ் மாவட்ட குழு உறுப்பினர் இப்ராஹிம் உள்ளிட்டோர் உரையாற்றினர். பகுதி குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.