திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை அருகாமையிலுள்ள விவேகானந்தா நகர் வாத்தியார் குளத்திற்கு அருகே மல்லிகை கடையிலும், அதன் எதிர்ப்புறம் உள்ள முட்புதரிலும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த லாட்டரி சீட்டுகளை வாங்க இரயில்வே ஊழியர்களும், அந்த பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களில் பணியாற்றக்கூடிய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கேரள மாநிலம் கர்நாடகா மாநிலம் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் இந்த ஒரு இடத்தில் மட்டும் தினசரி சுமார் 50 ஆயிரம் ரூபாய்க்கு தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து திருச்சி பொன்மலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாநகர சரகத்துக்கு உட்பட்ட அரியமங்கலம் காவல் நிலையம், பொன்மலை காவல் நிலையம், மாவட்ட புறநகர் பகுதியில் உள்ள திருவெறும்பூர் காவல் நிலையம் ஆகியவற்றில் எல்லையின் நடுவே இந்த இடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்