திருச்சி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கட்டட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:-

திருச்சி மாவட்டம் மல்லியம்பத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளி சந்திரசேகர் வயது (37) இவரது மனைவி ஜெயந்தி (30). இந்த தம்பதிக்கு 1 பெண் குழந்தை 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

 

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய சந்திரசேகர் அவரது மனைவி ஜெயந்தியிடம் வாக்குவாதம் செய்து அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த சந்திரசேகர் அவரை மட்ட பலகையால் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் வீட்டின் கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை சந்திரசேகரன் அண்ணன் அங்கமுத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார்.

 

இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சியங்களின் மற்றும் சந்திரசேகர் குழந்தைகளின் நேரடி சாட்சிகளின் அடிப்படையில் நீதிபதி ஸ்ரீவத்ஷன் இன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார். தீர்ப்பில் ஜெயந்தி கொடுமைப்படுத்திய வழக்கில் சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 1000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். ஜெயந்தியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு வழக்கறிஞராக அருள்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சந்திரசேகரை பலத்த பாதுகாப்புடன் போலீஸார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *