திருச்சி தென்னூர் ஆழ்வார் தோப்பு சின்னசாமி நகரை சேர்ந்வர் முருகன்(52) இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவரது தந்தை முருகன் மற்றும் அவரது தாயார் பானு என்கின்ற சாந்தி ஆகியோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவரது தாயை ஆபாசமாக பேசியதால் அவரது மூத்த மகன் விஜயகுமார் மதுபோதையில் இருந்ததால் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கொலையை மறைப்பதற்கு அவரின் உடலை அவரது வீட்டின் எதிரே உள்ள வாய்க்காலில் வீசி உள்ளார். இந்நிலையில் இன்று காலை அவரது தந்தையை காணவில்லை என நாடகமாடி வாய்க்காலில் கிடப்பது போல் அவரை மீட்டு இறுதி சடங்கில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தில்லை நகர் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்  அவரது வீட்டிற்கு வந்த தில்லைநகர் போலீசார் அவரின் உடலை மீட்டு அவரது மூத்த மகன் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனே தந்தையை மதுபோதையில் கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *