திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஐ.இ.டி. கல்லூரி பஸ் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற சென்ட் ஜேம்ஸ் பள்ளி ஆசிரியை பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை நடந்த இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

திருச்சி வயலூர் ரோடு அம்மையப்ப பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி மங்கைகரசி. (வயது 49). திருச்சி சென்ட் ஜேம்ஸ் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு செல்வதற்காக அவரது இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை அருகே 8 மணி அளவில் எம்.ஐ.இ.டி. கல்லூரி பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்