திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று காலை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்களா எனவும், மேலும் பள்ளியில் மாணவர்களுக்கு அளிக்கப்படுகிற ஸ்மார்ட் கிளாஸ் பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். மாணவிகள் அமைச்சரிடம் தங்கள் கற்ற பல்வேறு படங்களை மனப்பாடமாக ஒப்பித்து காண்பித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை வழங்கினார். மாணவர்கள் மாணவிகள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகளை ஆய்வு செய்தார் இன்று அந்தப் பள்ளியில் நூறாவது செயற்கையை தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை ஆய்வு செய்து வருகிறேன்.அந்த பள்ளிகளின் உட்கட்டமைப்பு, மாணவர் சேர்க்கை,ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்றவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.ஜீலை முதல் வாரத்தில் முதலமைச்சரிடம் ஆய்வு கூட்டம் உள்ளது. அந்த ஆய்வு கூட்டத்தில் நான் நடத்திய ஆய்வு குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் அரசு பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் பள்ளிகளிலிருந்து அதிக அளவு மாணவர்கள் தற்போது அரசு பள்ளிகளில் சேர்கிறார்கள்.திருச்சி மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 1500 மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் இணைந்துள்ளார்கள்.அரசு பள்ளி என்றால் வறுமை நிலை என்று இல்லாமல் அது பெறுமை நிலை என்கிற அளவில் இருக்கிறது.-தனியார் பள்ளிகள் 100 சதவீதம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர்கள் தயங்காமல் முன் வந்து நேரடியா புகார் அளிக்க வேண்டும். நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகு முடிவு செய்யப்படும். இடைக்கால ஏற்பாடாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுமா? என்று கேட்டதற்கு. ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைக்கு பிறகே முடிவு அறிவிக்கப்படும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *