திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அதில்..

5 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான இந்த நிறுவனம் 38 லட்சம் கோடி ரூபாய்க்கு சொத்துக்களையும், 34 லட்சம் கோடி ரூபாய்க்கு எல்.ஐ.சி fund களையும் உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலம் சாமானிய மக்களின் காப்பீடுகளை கேள்விக் குறியாக்குகிறது, எல்.ஐ.சி யின் வளர்ச்சி என்பது இந்த தேசத்தின் வளர்ச்சி, ஆகவே இந்த பங்கு விற்பனையை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.

ஒருவேளை பங்குச் சந்தையில் எல்ஐசியின் பங்கு விற்பனை எப்போது பட்டியலிட படுகிறதோ அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். மேலும் ஒன்றிய அரசு கார்ப்பரேட் செல்வந்தர்களுக்கான வரியை குறைத்து, சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டி பெரும் செல்வந்தர்களுக்கு சலுகைகளாக கொடுக்கப்படுகிறது. தனியார்மயத்தை நோக்கி எல்.ஐ.சி நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.