சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2-வது தெருவை சேர்ந்த பெயிண்டர் தொழில் செய்து வருபவர் முருகன் வயது (41). இவரது மனைவி தமிழரசி வயது (36) இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழரசி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கணவனை பிரிந்து சென்ற தமிழரசி குடும்ப செலவுகளுக்காக தண்டையார் பேட்டையிலுள்ள தெருவில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தமிழரசி நடத்தி வரும் இந்த கடைக்கு வந்த முருகன், நாம் சேர்ந்து வாழலாம் என மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு தமிழரசி கணவருடன் செல்ல மறுத்துள்ளார்.

இதனால் ஆத்தரமடைந்த முருகன் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை எடுத்து தமிழரசி முகத்தில் வீசியுள்ளார். இந்த ஆசிட் வீச்சில் பலத்த காயமடைந்த அவர் வலியால் அலறி துடிதுடித்தார். தமிழரசியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிந்து கணவர் முருகனை கைது செய்தனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு தான் சட்டதிட்டங்கள் கொண்டு வந்தாலும் இது போன்ற கொடுர செயல்களில் ஈடுபவர்களால் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கொடுமைகள் நடந்து கொண்டு இருப்பது பெரும் வேதனையிலும் வேதனையாக தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்