தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இளைய தளபதி நடிகர் விஜய். இவரது அரசியல் வருகை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இளைய தளபதி நடிகர் விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது.. நடிகர் விஜய் தனது 49-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர்..

திருச்சி கண்டோன்மெண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது . அதில்‌ எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே என்ற வாசகத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .திருச்சி தெற்கு மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் போற்றும் வரலாறே மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கு அடிக்கல் நாட்டாக தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளை ரசிகர்கள் மூலம் நடிகர்‌‌ விஜய் செய்து வருகிறார்.

மேலும் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்த மாணவியை விஜய் ரசிகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர் மாணவ மாணவிகளை அழைத்து அவர்களுக்கு பரிசு பொன்னாடையும் அணிவித்தார் அதே மேடையில் மாணவர் மத்தியில் பேசும் போது ஓட்டுக்கு பணம் வாங்காதீர்கள் உங்களுடைய பெற்றோர்களும் வாங்க அனுமதிக்காதீர்கள் ஏனென்றால் வருங்கால தலைவர்களை தேர்வு செய்யப் போறவர்கள் நீங்கள்தான் வரும் தலைமுறைகள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்

இந்நிலையில் திருச்சி என்றாலே திருக்குமுனை என திராவிட கட்சிகள் கூறி வந்த நிலையில் நடிகர் விஜய்க்கும் திருச்சி திருப்புமுனையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் திருச்சி மையப்படுத்தி பல்வேறு திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் விரைவில் திருச்சியில் மாநாடு நடைபெறும் என கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பாக விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் பிறந்தநாளை போற்றும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கேட்டபோது விரைவில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் திருச்சி மையமாகக் கொண்டு மாநாடு நடைபெறும் என தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் திருச்சியில் விஜய் ரசிகர்கள் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் பேசும் பொருளாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *