திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் மற்றும் தமிழகத்தின் முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு திருச்சி திமுகவின் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி கோட்டத் தலைவர் துர்கா தேவி பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் தொண்டர்கள் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து கொண்டாடினர்.