தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் நிர்வாகிகள் பொது குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமது ராஜா தலைமை தாங்கினார். இந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக தமுமுக மாநில செயலாளர் மைதீன் செட் கான் கிளைப் பகுதி ஒன்றியம் பேரூராட்சி நகரம் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய மாவட்ட தலைமை நிர்வாகிகளை தேர்வு செய்தார். இதில் திருச்சி மாவட்ட தலைவராக முகமது ராஜா பொறுப்பேற்றுக் கொண்டார் அதேபோல் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது மற்றும் தமுமுக மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லா கான் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது எம்எல்ஏ பேசுகையில்:-

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி காந்திஜியின் பிறந்தநாளையொட்டி ஆர் எஸ் எஸ் அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த உச்ச நீதிமன்றம் நிபந்தனை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடையானையை பெற வேண்டும். மேலும் தமிழ்நாடு ஒரு அமைதி பூங்கா தமிழகத்தில் சாதி மத மோதல்கள் இல்லாத ஒரு தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் இயக்கம் திட்டமிடுகிறதோ என்ற அச்ச உணர்வு தமிழக மக்களிடையே ஏற்பட்டுள்ளது. அந்த அச்சத்தை போகின்ற வகையில் ஊர்வலத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்நாட்டில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவினுடைய அலுவலகங்களில் என்ஐஏ என்கிற மத்திய புலனாய்வு முகமை நடத்திய அந்த சோதனைகள் மாநில உரிமைகளுக்கு எதிராக நடைபெற கூடியதாக இருக்கிறது. மாநில உரிமைகளை பறிக்கக்கூடிய இந்த என்ஐஏ போன்ற அமைப்புகள் இன்றைக்கு தமிழ்நாட்டில் நடத்தி இருக்கக்கூடிய இந்த சோதனைகள் மூலமாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதில் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது அதில் ஈடுபட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருந்தால் அந்தக் குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் இதே சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தாங்களே இதுபோன்ற வன்முறை காரியங்களை செய்து கொண்டு அரசிடத்தில் பாதுகாப்பு பெற வேண்டும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையை பெற வேண்டும் என்பதற்காக நடந்த சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் இருக்கிறது.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். யார் வன்முறையை கையில் எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ள முடியாது அதற்கு தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனைகளுக்கு மூல காரணமானவர்களை இருக்கக்கூடிய சக்திகள் யாராக இருந்தாலும் அந்த வேரை கண்டறிந்து அழிக்க வேண்டும் அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடிய சக்திகள் அரசியலில் பதவிகளைப் பெற வேண்டும் கலவரங்களை ஏற்படுத்தி தன்னுடைய ஆட்சியை தக்க வைக்க வேண்டும் நிலை நிறுத்த வேண்டும். தான் நினைக்கக்கூடிய ஒரு தேசத்தை கட்டமைக்க வேண்டும் அதற்காக வேண்டி ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீதும் சிறுபான்மையினர் மக்கள் மீதும் மதவெறி போக்குகளை இந்தியா முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டு சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும். தமிழக மண்ணை மதவெறி மண்ணாக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அது கன்னியாகுமரியில் நடந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி கோயம்புத்தூரில் நடந்த பிரச்சனைகளாக இருந்தாலும் சரி தமிழகத்தை மதவெறி மண்ணாக்க வேண்டும் மாற்ற வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட சம்பவங்கள் எல்லாம் எதிர்கொண்டு தமிழக மக்கள் அமைதி சமூக நல்லிணக்கத்தை சமூக நீதியை பாதுகாக்கின்ற வகையில் தமிழக மண்ணை பாதுகாத்து வருகின்றனர். அதற்கு களங்கம் கற்பிக்கக் கூடிய வகையில் அதற்கு பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் ஒடுக்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. பத்து ஆண்டை கடந்த சிறைவாசிகள் நோயற்றவர்கள் மனநல பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்கள் அனைவரையும் சாதி மத பேரம் இன்றி பாரபட்சமில்லாமல் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சோதனை குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செய்தி தொடர்பாளர் வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் அதற்கு கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதை தான் தமிழக அரசினுடைய கருத்தாகவும் நாங்கள் பார்க்கின்றோம் அதனால் தமிழக அரசு இதில் மௌனம் காக்கவில்லை அதனால் தமிழக அரசு சரியான கருத்தை வெளியிட்டு இருக்கிறது தொடர்ந்து இது போன்ற மாநில உரிமைகளை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஒன்றிய அரசு ஈடுபடாமல் இருப்பதற்கு தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *