தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் துரை கண்ணு சிலை திறப்பு விழாவில் மற்றும் ஒரத்தநாடு பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி விமான நிலையம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர் களை சந்தித்து பேசுகையில்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொண்டார். தமிழகத்தில் திறமையற்ற முதலமைச்சர் இருக்கிறார். அதே போன்று காவல்துறையினர் தமிழகத்தில் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இதுவரை சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கள்ளச்சாராயம், பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், கொலை, கொள்ளை போன்ற அனைத்து சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. உடனடியாக திறமையற்ற முதல்வர் ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அதே போன்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். திமுக அரசு மக்களின் நலனின் எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

பல முறை தமிழக சட்டப்பேரவையில் கள்ளச்சாராயம் போலி மதுபானத்தை தடை செய்ய வேண்டும் கட்டுப்படுத்த வேண்டும் என குரல் கொடுத்தும் இதுவரை செவி சாய்க்காத அரசு தான் இந்த அரசு என தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ஜோடார் பாளையத்தில் தனியார் ஆலையில் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது இரவு நேரத்தில் அங்கு பெட்ரோல் கொண்டு வீசப்பட்டுள்ளது. உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இது போன்று தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த திமுக அரசு விடியாக அரசு திறமையற்ற முதலமைச்சர், திறமையற்ற அமைச்சர்கள் இருப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *