திருச்சியில் இன்று மாலை நடைபெற உள்ள திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கான அறிமுக கூட்டமும் தேர்தல் பரப்புரை கூட்டமும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வருகை தந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் அளித்த பேட்டியில் ஏகாதிபத்தியத்திற்கும், ஜனநாயகத்திற்கும் நடக்கின்ற தர்மயுத்தம் தான் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என இன்று கோஷத்தை வைக்கின்ற இந்துத்துவா சக்திகள் சனாதான சக்திகள் கை ஓங்கி விடக்கூடாது என்பதிலே இந்தியா கூட்டணி வலுவாகவே இருக்கிறது.

இன்று தமிழகத்தில் பிரச்சாரத்தை தமிழக முதல்வர் திராவிடம் மாடல் ஆட்சியை அனைத்து மாநிலத்திற்கும் முன்மாதிரியாக எடுத்துக்காட்டாக நடத்தி வருகின்ற மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தை துவங்குகிறார். தமிழகத்திலே புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன். அவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தான் டெல்லி முதலமைச்சரை கைது செய்து கொண்டு போனார்கள். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்கள் இந்துத்துவ அஜண்டாக ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றனர். சிஏஏ சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியருக்கு கொடுக்க வேண்டிய உரிமை கூட மறுத்து வருகிறார்கள். பொது சிவில் சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றார்கள். ஆகவே ஜனநாயகத்திற்கு மதச்சார்பற்ற தன்மைக்கும் சம்மதர்ம கொள்கைக்கும் நேர்விரோதமாக ஒரு கூட்டம். இந்தியாவில் பல இடங்களில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் அவர்கள் காலெடுத்து வைக்க முடியாது.இது பெரியார் பூமி, அறிஞர் கலைஞருடைய பூமி. இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு உண்மையாக விடுக்கப்பட்ட சவால்.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்காக தான் கெஜ்ரிவால் கைது. பாரதி ஜனதாஇது அரசியல் ஒத்துக் கொள்ள மறுக்கிறது. அவர்கள் எதைத் தான் ஒத்துக் கொள்வார்கள். நேற்று திருச்சிக்கு வந்த துரை.வைகோ ஸ்ரீரங்கத்தில் சாமி கும்பிட்டு விட்டு வெளியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் இது பற்றி உங்கள் கருத்து என்று கேள்விக்கு நல்லா பார்கிறேன் என்று நகைச்சுவையாக கூறினார். கட்சியினரின் வற்புறுத்தின் காரணமாக அவர் தேர்வு செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *