அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனையின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்த் ஓட்டலில் நடைபெற்றது. இந்த மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்திற்கு மாநில அவைத்தலைவர் நீலகண்டன் பிள்ளை வரவேற்புரை ஆற்றிட, நிறுவனரும், மாநில தலைவருமான பட்டுக்கோட்டை அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அண்ணாதுரை, அமைப்பு தலைவர் பழனிவேல் பிள்ளை, மாநில ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்களாக தமிழகத்தில் உள்ள பிள்ளைமார் முதலியார் வேளாளக் கவுண்டர் வெள்ளாளஞ் செட்டியார் ஆகிய இனத்தவர்கள் ஒன்று கூடி நடத்த உள்ள முதல் மாநில மாநாடு குறித்தும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அகில இந்திய வேளாளர் வெள்ளாளர் கூட்டமைப்பு மகா சேனையின் நிறுவனரும், மாநில தலைவருமான பட்டுக்கோட்டை அண்ணாதுரை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தமிழகத்தில் இரண்டு கோடி மக்கள் தொகை கொண்ட வெள்ளாளர் இனத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக வெள்ளாளர் பிரிவில் பிள்ளை பட்டம் கொண்ட பிரிவினர் தனி மாநாடாகவும், கொங்கு மண்டலத்தை சார்ந்த கொங்கு வேளாள கவுண்டர் பட்டம் பிரிவினர் தனி மாநாடாகவும், முதலியார் பட்டம் கொண்ட பிரிவினர் தனி மாநாடு நடத்தி வந்தனர் தற்போது தமிழகத்தில் முதன்முறையாக நான்கு வெள்ளாளர் வேளாளர் ஒன்று சேர்ந்து திருப்புமுனை மாநாடு நடைபெற உள்ளது இந்த வேளாளர் பெயர் மீட்பு மாநாட்டில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

குறிப்பாக எங்களுடைய பெயர் எங்களுக்கு சம்பந்தமில்லாத மற்றொரு இனத்தவர் இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பெயரை எக்காரணத்திற்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதற்கான முதல் கட்ட மாநாடாக இது நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்க உள்ளோம் மேலும் மத்திய பாஜக அமைச்சரையும் அழைக்க உள்ளோம். இந்த மாநாட்டின் கோரிக்கைகளாக தேசிய தலைவர் செக்கிழுத்த செம்மல் வ உ சி ஐயா அவர்களின் பிறந்தநாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் அதேபோல் மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் இறந்த நாளை மாவீரர் தினமாக அறிவிக்க வேண்டும் ஐயா சேக்கிழார் முதலியார் அவர்களின் பிறந்தநாளை ஆன்மீக தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த மாநாட்டில் முன்னிறுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்