தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டு ஆகியும் தேர்தலில் அறிவித்தபடி மக்களுக்கான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் திமுக அரசை கண்டித்து திருச்சி பிஎஸ்என்எல் மண்டல அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்…… 

தமிழகத்தில் நடைபெறும் தவறான ஊழல் மிகுந்த ஆட்சியை போதைகளுக்கு துணை போகும் ஆட்சியை, தமிழை அழிக்கின்ற ஆட்சியை கண்டித்து பா.ஜ. கட்சி சார்பில் உண்ணவிரதம் நடைபெற்றது. பொதுத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தாய்மொழி கல்வியில் தோல்வியடையும் அளவிற்கு கல்வித் தரம் உள்ளது. தமிழை அந்த அளவுக்கு அழித்துள்ளனர். ஊழல் தலை விரித்து ஆடுகிறது. முதல்வர் இருக்கும் மேடையிலேயே கொள்கை பரப்பு செயலாளர் பிரிவினைவாதம் பேசும் அளவிற்கு முன் வந்துள்ளனர். 1960களில் நடந்த சம்பவத்தை அவர் கோடிட்டு காட்டி பேசுவது, மீண்டும் 60 ஆண்டுகளுக்கு பிந்தைய நிலைக்கு போவது போல் உள்ளது. அது திமுகவின் கருத்தா, திமுக ஆட்சியின் கருத்தா, தமிழக முதல்வரின் கருத்தா என்பதற்கு முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

அதற்கு விளக்கம் சொல்ல தவறினால், பிரிவினைவாதத்தை நோக்கி அவர் அடி எடுத்து வைப்பதாகத்தான் அர்த்தம். அவ்வாறு தமிழகத்தை பிரிப்பதாக நினைத்தால் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க மாட்டோம். பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று சொல்வது உங்களுக்கு பெருமை. அழகுமுத்துக்கோன், மருது சகோதரர்கள் கட்டபொம்மன் வேலு நாச்சியார் போன்றவர்கள் வாழ்ந்த இந்த பூமி. அந்த தேச பக்தர்களின் வழி தோன்றல்கள் என்று எங்களை சொல்லிக் கொள்வோம். அத்தகைய சவால் விடுத்தால் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளோம்.

அந்த தலைவர்களின் வழியில் போராடி வென்றே தீருவோம்.அவர்கள் பிரிவினைவாதம் பேசுவதை திமுகவுக்கு ஓட்டளித்தவர்கள் உட்பட எட்டு கோடி தமிழர்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். நடைபெற உள்ளாட்சி இடைத்தேர்தலில் 34 இடங்களில் போட்டியிடும் திமுகவினர் திராவிட நாடு என்ற கொள்கையை நோக்கித்தான் செயல்படுகிறோம் என்று கூறினால் ஒரு ஓட்டு கூட கிடைக்காது. அன்று தமிழகத்தை சுடுகாடாக மாற்ற நினைத்தவர்கள் ஏறக்குறைய அதை செய்து விட்டார்கள்.விவசாயம் உட்பட அனைத்து தொழில்களிலும் தமிழகத்துக்குள் வெளிமாநிலத்தவர் வந்துள்ளனர். இவ்வளவு காலம் அதை செய்த தமிழர்கள் எங்கே போனார்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி. அவர்களை எல்லாம் போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளனர். போதைப் பொருட்கள் அனைத்துமே சர்வ சாதாரணமாக மாணவர்களுக்கு கூட கிடைக்கிறது. திமுக ஆட்சிக்காலம் துவங்கியதில் இருந்து இதை கண்டிக்கிறோம். தனி திராவிட நாடு கேட்டு கிளம்பினால் ஒருவர் கூட பின்னால் வர மாட்டார்கள். இது தமிழர்கள் பூமி அசைக்க நினைத்தால் அசிங்கப்பட்டு போவீர்கள். அழிந்துபோவீர்கள். இவ்வாறு அவர் பேசினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்