தமிழகம் மீனவர்களை தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசு கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருநாவுக்கரசர்,

தமிழ்நாட்டில் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பத்தாண்டு காலம் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, பா.ஜ.க ஆட்சியில் தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் கட்டிடம் இன்னும் கட்டப்படவில்லை, வெள்ள நிவாரண நிதி ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவில்லை வெறும் தேர்தல் ஸ்டென்ட் காக பிரதமர் சுற்றுபயணம் செய்வதால் மக்களுக்கு எந்த பலனும் இருக்காது.

தமிழக மீனவர்களை பா.ஜ.க அரசு வஞ்சிக்கிறது. இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணி கட்சியை சேர்ந்த யார் வேண்டுமானாலும் தங்களுக்கு இந்த தொகுதி தான் வேண்டும் என கேட்கும் உரிமை இருக்கிறது. அந்த வகையில் திருச்சி தொகுதியை கேட்பதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. தற்போதைய எம்.பியாக உள்ள எனக்கும் அந்த உரிமை இருக்கிறது. திருச்சி தொகுதியை கேட்டு மீண்டும் இங்கு போட்டியிடுவேன். கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுற்ற பிறகு அறிவிப்பு வரும்.

எம்.பியை கண்டா வர சொல்லுங்க என தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அனைத்து எம்.பிகளும் வெற்றி பெற்ற உடன் அமெரிக்காவிற்காக சென்று விட்டோம்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு நாள் பேசாமல் தேர்தல் நேரத்தில் புகழ்ந்து பேசுவது அ.தி.மு.க வின் வாக்குகளை கவர்வதற்காக இருக்கலாம். வாக்குகளை கவரும் உள்நோக்கத்தோடு கூட அவர் பேசி இருக்கலாம். நான் பா.ஜ.க விற்கு செல்வதாக யாரோ எழுதியதை ஊடகங்கள் பெரிதாக்குகின்றன. என்னை நீங்கள் நினைத்தாலும் பா.ஜ.க விற்கு அனுப்ப முடியாது. நான் பா.ஜ.க விற்கு செல்வேன் என கூறுபவர்களை செறுப்பால் அடிப்பேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்